உண்மையை வெளிப்படுத்த விரும்புகிறேன்! ஜனாதிபதி அநுரவின் சமீபத்திய பதிவு
போலியான தோற்றத்தை நான் உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. உண்மையான என்னை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முயற்சிக்கின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் இது குறித்த பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் நம்பிக்கை
குறித்த பதிவில்,
"நமது ஆட்சிக் காலத்தில் நாம் அதிகாரத்திற்கு வரும்போது வாக்களித்த மக்களை விட அதிகமானோர் எங்களை நம்பத் தொடங்குவார்கள் என்று நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.
அந்த நம்பிக்கையை உண்மையான நேர்மையின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும்.

நான் ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கிக்கொண்டால், உண்மை தெரியவரும் போது அந்த நம்பிக்கை தகர்ந்துவிடும்.
அதனால்தான் உண்மையான என்னை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த நம்பிக்கையை வென்றெடுக்க முயல்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam