இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா சாரா..! கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து கேள்வி
இந்தியாவில் இருப்பதாக கூறப்படும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாராவை இலங்கைக்கு அழைத்து வர ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்று ஐ.ம.சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றையதினம்(23.09.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு சாராருக்கு தண்டனை வழங்கப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கால்பங்கு மாத்திரமே நீதி கிடைத்துள்ளது.
பிரதான சூத்திரதாரி யார்
இவர்களைத் தவிர இன்னும் பிரதான சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதலுக்கு பிரதானமாக பணம் வழங்கியவர்கள் இருக்கின்றார்கள். பிரதான சூத்திரதாரியை அம்பலப்படுத்தினால் மாத்திரமே இங்கு பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். .
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் கடந்த அரசாங்கத்தின்போது ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கே தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்த அரசாங்கம் எதனையும் செய்துவிடவில்லை.

மேலும், குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாரா இந்தியாவில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் கடந்த காலங்களில் குறிப்பிட்டார்கள்.
இந்தநிலையில், தற்போது இந்தியாவுடன் இந்த அரசாங்கம் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன. சாராவை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்து ஏதேனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா.
அல்லது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri