சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களின் நிலை என்ன - வெளியாகியுள்ள புதிய தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Singapore
By Dhayani Nov 10, 2022 12:25 AM GMT
Report

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவுக்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்டு வியாட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது என வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களின் நிலை என்ன - வெளியாகியுள்ள புதிய தகவல் | 300 Sri Lankans Stranded In International Waters

வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட தகவல்

இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் , படகில் ஏறுவதற்கு முன் சட்டவிரோத பயணத்திற்காக ஆட்கடத்தல்காரர்களுக்கு பல இலட்சம் ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மியன்மார் (பர்மா) நாட்டுக் கொடியுடன் காணப்பட்ட கப்பல் கடந்த 6 ஆம் திகதி தென் சீனக் கடலில் வியட்நாமின் தெற்கு கடலோர வுங் தோ முனையில் (Vung Tau Cape) இருந்து 258 கடல் மைல்கள் தொலைவில் சேதமடைந்த நிலையில் கடலில் சிக்குண்டுள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களின் நிலை என்ன - வெளியாகியுள்ள புதிய தகவல் | 300 Sri Lankans Stranded In International Waters

கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்த நிலையில் தகவவலறிந்து சிங்கப்பூரில் இருந்து அதேகடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜப்பான் நாட்டின்’ஹெலியோஸ் லீடர்’ (Helios Leader) என்ற சரக்குக் கப்பல் உடனடியாக இலங்கை அகதிகள் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டு 40 நிமிட நேரத்தில் அகதிகள் கப்பலை நெருங்கிய ஜப்பானியக் கப்பல் அதிலிருந்த 303 பேரையும் மீட்டு வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அகதிகள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைக் கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களின் நிலை என்ன - வெளியாகியுள்ள புதிய தகவல் | 300 Sri Lankans Stranded In International Waters

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த அகதிகள் விடயத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அகதிகளை ஐ.நா விடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US