இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து! ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி
புத்தள - மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று (24) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லவாயவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பயணிகளை இறக்குவதற்காக மஹகொடையாய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாறையிலிருந்து அம்பாறை நோக்கி பின்னால் வந்த தனியார் பேருந்து அதன் பின்புறத்தில் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர சிகிச்சையில் சொகுசு வாழ்க்கை! கடவுச்சொற்களை நாளுக்கு நாள் மறக்கும் சுரேஸ் சலே - சிக்கவுள்ள முக்கிய ஆதாரங்கள்
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri