ஹரக் கட்டா மற்றும் பத்மே இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சிறப்பு விசாரணை
பாதாள உலக குற்றவாளிகளான நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற 'ஹரக் கட்டா' மற்றும் 'கெஹெல்பத்தர பத்மே' ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் சிறப்பு விசாரணையையொன்றை ஆரம்பித்துள்ளது.
ஹரக் கட்டாவும், கெஹல்பத்தர பத்மேவும் சந்திப்பதற்கான சூழல் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்தும் ஆராய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மற்றும் சிறைத்துறை மட்டங்களில் விசாரணை
வெலிசர சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' மற்றும் 'கெஹெல்பத்தர பத்மே' ஆகியோருக்கு இடையே நேற்று முன் தினம் (22) மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த 'கெஹெல்பத்தர பத்மே' வெலிசர கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்ற பின்னர் வெலிசர சிறைச்சாலையில் அவர் தங்கியிருந்த வார்டுக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த மோதல் தொடர்பாக பொலிஸ் மற்றும் சிறைத்துறை மட்டங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
தீவிர சிகிச்சையில் சொகுசு வாழ்க்கை! கடவுச்சொற்களை நாளுக்கு நாள் மறக்கும் சுரேஸ் சலே - சிக்கவுள்ள முக்கிய ஆதாரங்கள்
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam