கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு சற்றுமுன் வெளியான அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் நாளை(13.02.2026) வருகைத் தருவதை தவிர்க்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு இன்னும் சீர்செய்யப்படாமையினால், பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர்.

மேலும், சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை(16.02.2026) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று(12) வருகை தந்த விண்ணப்பதாரர்களுக்கு, திங்கட்கிழமை சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri