அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரே ஒரு கையெழுத்தினால், முன்னாள் எம்.பி அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுதலைப் பெற முடியும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை மன்னியுங்கள்
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறும் சரத் பொன்சேகா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் விசேட கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி ஒரு பேனையைத் தட்டுவதன் மூலம், இத்தகையவர்களை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க முடியும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

அமரகீர்த்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களை மன்னியுங்கள் எனவும் ஜனாதிபதியிடம் அவர் கோரியுள்ளார்.
அரகலய போராட்டத்தின் போது 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தின்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் தாக்கி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய, 12 பேருக்கு கடந்த 11ஆம் திகதி, மூவர் அடங்கிய நீதிபதி குழாமால் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam