அதிரடியாக கைதான நாமல் - பொதுஜன பெரமுண முக்கியஸ்தர்களின் அவசர ஒன்று கூடல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அவசர ஒன்று கூடல்
இதற்கிடையே மொட்டுக் கட்சியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரம் நகரில் மக்கள் போராட்டம் (ஜன சடன) என்ற பெயரில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் பேரணியொன்று நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

இவ்வாறான நிலையில் நாமல் ராஜபக்சவின் கைது விவகாரத்தை எதிர்கொள்வது மற்றும் அநுராதபுர பேரணியை வெற்றிகரமாக நடத்துவது உள்ளிட்ட முக்கிய விடயங்களை கலந்துரையாடுவதற்காக பொதுஜன பெரமுண கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
பத்தரமுல்லை , நெளும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமையகத்தில் இன்று(5) முற்பகல் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.