வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதல் குழு இம்மாத இறுதியில் இஸ்ரேல் செல்லவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓய்வூதியம் மற்றும் மருத்துவ அடிப்படையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
காணி உரிமை அனுமதிப்பத்திரம்
அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காணிகளுக்கான 'பரம்பரை' திட்டத்தின் கீழ், போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கி தற்போது அனுபவிக்கும் காணிகளுக்கான உரிமைக்கான அனுமதிப்பத்திரம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், சேவையில் இருப்பவர்களுக்கும், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கும் சலுகை வட்டி விகிதத்தில் விசேட கடன் வசதிகளை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |