மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதியை திறந்து வைக்க நடவடிக்கை
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவனையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகரசபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
1983 முதல் 1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள் பயன்பாடின்றி மூடப்பட்டு காணப்பட்டது.
மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள வீதி
குறித்த வீதி மூடப்பட்ட காலப்பகுதியில் இராணுவ சோதனை சாவடி உட்பட பல்வேறு இராணுவ சோதனை மற்றும் பாஸ் வழங்கும் அலுவலகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்தது.
மத்திய கிழக்கில் திக் திக் நிமிடங்கள் - வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பகிரங்க மிரட்டல்
அதன் பின்னர் நீதிமன்ற கட்டு காவல் பொருட்கள் சேமிக்கப்பட்டு வந்ததோடு, பயன்படுத்த முடியாமல் காணப்பட்ட நிலையில் குறித்த வீதி மற்றும் அதைச் சூழ உள்ள பகுதிகள் நகரசபையால் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


