அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற போது மந்திரக்கோல் வழங்கப்படவில்லை! அமைச்சர் வசந்த சமரசிங்க
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் போது, அவருக்கு ஒரு மந்திரக்கோல் வழங்கப்படவில்லை என்றும், திவாலான ஒரு திறைசேரியே வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது அமைச்சர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வசந்த சமரசிங்க
அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,
நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நெருங்கிவிட்டன. இந்த இரண்டு வருடங்களுக்குள் எங்களை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
என்ன செய்வது? சகோதரர் அனுர திஸாநாயக்க ஜனாதிபதியான போது அவரது கையில் மந்திரக்கோல் எதுவும் கொடுக்கப்படவில்லை.

எங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது திவாலாகிப் போன ஒரு திறைசேரி ஆகும். வாகனங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. உரங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. எரிபொருளை இறக்குமதி செய்ய முடியவில்லை.
நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பிதமடைந்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம்.
ஆனாலும் எங்களால் முடிந்த அனைத்து வகையிலும் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். நாட்டின வருமானத்தை அதிகரிக்க வழி செய்துள்ளோம் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 6 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri