இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம்: கிளிநொச்சி மக்களின் குற்றச்சாட்டு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான சிறுபோக பயிர்ச் செய்கை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பயிர் செய்கை மேற்கெள்ளாது காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்பட்ட விதைப்புக்கள் தொடர்பாக உரிய கமகார அமைப்புகள் கமநல சேவை நிலையங்களுக்கு தெரியப்படுத்தாமையின் காரணமாவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாவட்ட பயிர்ச் செய்கை குழுவின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே சிறுபோக செய்கைக்கான உரக் கோரிக்கை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளரால் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மாவட்ட விவசாய சம்மேளனத்தின் செயலாளார் மு.சிவமோகனை தொடர்பு கொண்டு வினவியை போது,
சிறுபோக செய்கை
கடந்த சிறு போக செய்கையின் போது விவசாயிகள் பயிர் செய்கை கூட்டத் தீர்மானங்களுக்கு அமைவாக பயிர்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை ஒன்று ஏற்பட்டது. காரணம் உரிய காலத்தில் எரிபொருள் கிடைக்க பொறாமையினால் விவசாயிகள் ஒரு மாத காலம் பிந்திய நிலையில் தங்களுடைய பயிர்செய்கையை மேற்கொள்ள கூடியதாக இருந்தது.
இது தொடர்பாக கால நீடிப்பு செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் அறிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.



