சித்திரவதையினால் மனநலம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி (Video)
தமிழர்களின் சுயநிர்ணய இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய எத்தனையோ முன்னாள் போராளிகள் எம்மத்தியில் சொல்லண்ணா துயரங்களுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம்.
ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த வகையில் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு நீண்ட காலம் சிறையிலிருந்துள்ளார்.
சிறையிலிருந்து வெளியில் வரும் போது அவருக்கு தாய், தந்தை இருவரும் இல்லை. அத்துடன் ஆதரவளிக்கவும் யாரும் இல்லை. குறித்த முன்னாள் போராளியின் வாழ்க்கை தெரு ஓரங்களிலும் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கழிந்துள்ளது.
இவ்வாறு சித்திரவதை வலியால் மனநலம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியின் இன்றைய நிலை தொடர்பில் ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' நிகழ்ச்சியூடாக தெரிந்துக்கொள்ளலாம்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600