ரதல்ல குறுக்கு வீதியில் பொது போக்குவரத்தினை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை(Video)
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கடந்த சில வருடங்களாக பொது போக்குவரத்து ரதல்ல குறுக்கு வீதியிலேயே இடம்பெற்று வந்தது.
குறித்த வீதியில் தனியார் மற்றும் இலங்கை போக்வரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து சுற்றுலா வந்த பேருந்து ஒன்று ரதல்ல குறுக்கு வீதியில் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் வானில் பயணம் செய்த ஆறு பேரும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஒருவர் உட்பட எழுபேர் பலியாகியதோடு, குறித்த பேருந்தில் பயணித்த 53 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஒவ்வொரு விதமான கட்டண அறவீடு
மேலும், ரதல்ல குறுக்கு வீதியில் பார ஊர்திகளுக்கான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில் குறித்த போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளமையினால் தோட்டபுறங்களில் இருந்து நானுஓயா, நுவரெலியா,உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இந்த குறுக்கு வீதியில் தற்போது சில அரச பேருந்துகளின் போக்குவரத்து மாத்திரம் இடம்பெறுவதாகவும், அவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கட்டண அறவீடு இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கை தடைபட்டதால், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது குறித்த வீதியில் பயணஞ் செய்யும் சாரதிகள் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் பயணஞ் செய்வதாகவும் எனவே மீண்டும் பொது போக்குவரத்தினை ஆரம்பிக்குமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
