வசமாக சிக்கிய கோட்டாபாய! ஆபத்தில் சுரேஷ் சாலே - குடும்பத்தினரின் பின்னணியில் யார்..!
கொழும்பின் அரசில் களம் முற்றுமுழுதாக சூடுபிடித்துள்ளது.
அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை கைது செய்து தடுத்து வைத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பயணத்தடை வழங்கிய பிறகு புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில், தற்போதைய அரசாங்கம் மீது சாட்சிகளை பாதுகாக்க தவறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அந்தவகையில் சுரேஷ் சாலே மன உளைச்சலில் இருக்கின்றார், அவர் இறக்க போகின்றார் என்று சில விசமிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
நீண்ட காலம் வெளியில் தெரியாமல் இருந்த சுரேஷ் சாலேவின் குடும்பத்தினர் தற்போது வெளியில் வந்தமையானது அவர்களுக்கு பின்னால் இருந்து யாரோ அழுத்தம் கொடுப்பதை போலுள்ளது.
அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் இல்லாது பிள்ளையானின் வாக்குமூலமும் சுரேஷ் சாலேவின் கைதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam