மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் அந்தனி லோரன்ஸின் நினைவேந்தல்
மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் அந்தனி லோரன்ஸின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ஹட்டனில்(Hatton) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவு தினம் ஹட்டனில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலய கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
நினைவு தின நிகழ்வு
நிகழ்வில், அந்தனி லோரன்ஸின் உருவ படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அவர் மலையக மக்கள் முன்னணிக்கும், மலையக தொழிலாளர் முன்னணிக்கும் ஆற்றிய சேவைகள் தொடர்பிலும் நினைக்கூறப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் தாளமுத்து சுதாகரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |