மலையக மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டு புகைப்படக் கண்காட்சி (Photos)
மலையக மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றப்படாத நிலையிலுள்ள வேலைதிட்டங்களை புகைப்படங்களினூடக சித்தரிக்கும் வண்ணம் 40 மலையக இளைஞர் யுவதிகளினால் மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் 100 புகைப்படங்கள் உள்ளடங்களான புகைப்படக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.
யாழ் ஓவியக்கூடம் கலைத்தூது கலாமுற்றம் இல 15 றக்கா வீதியிலுள்ள மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இதன் மூலம் இந்த நாட்டுக்கு சொல்ல வருகின்ற செய்தியாக, 200வருடமாக தீர்க்கப்படாத நிலையிலுள்ள மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை அரசாங்கமோ ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களோ செய்யமுடியாத நிலையிலுள்ளது.
ஆகவே மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுடைய திறமை மூலமாகவே இவ்வாறான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இது அந்த பிரதேசத்தில் இருந்து பிறந்த பிள்ளைகள் தமக்கான நீதியினை நிலைநாட்ட கோரியே இவ்வாறான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது என மலையக மக்களின் சிறுவர் தேவைகளை கண்டறியும் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அழகர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதில் மலையக கலைத்துறை மாணவர்கள் இதர பாடவிதான செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
மேலும், இக் கண்காட்சி அதன் ஆரம்பத்தில் தலவாக்கல, பதுளை, பண்டாரவளை, கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்கள் ரீதியாக செய்யப்பட்டு இப்போது யாழ் மாவட்டத்திலும் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது,











பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam