கொள்கலன் விடுவிப்பு விசாரணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமனம்
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் உறுப்பினராக அமைச்சர் உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலையியற் கட்டளை 106 இன் விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் இன்று (18.02.2026) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய உறுப்பினர் நியமனம்
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக ஆய்வு இல்லாமல் விடுவித்தது குறித்து விசாரித்து அறிக்கை அளிப்பதற்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலகே விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவும்,
இது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்கவும் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் செயல்படுகிறது.