முடக்க நிலையை நோக்கி இலங்கை! எச்சரிக்கும் நிபுணர்கள்
கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கிராமப்புறங்களில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. நோயாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்தால் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும். நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களில் 10,837 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam