மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழையால் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாபீல்ட் தோட்டத்தில் குடியிருப்பு பின்புறத்தில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில் சமையலறை முற்றாக மண்ணினால் மூடப்பட்டுள்ளது.
மண்ணால் மூடப்பட்ட வீட்டின் பல பகுதிகள்
இதன்போது வீட்டில் இருந்த பெருமளவு பொருட்கள், நீர் தாங்கிகள், மலசலகூடம் என்பனவும் மண்ணால் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் ஆபத்துக்கள் நேரவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் பனிமூட்டம் மற்றும் குளிருடனான காலநிலை நிலவி வருவதுடன், பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









