நுவரெலியாவில் காலநிலை மாற்றம்! சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முற்றாக நிறுத்தப்பட்டு சவாரிக்கு அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நேற்றைய தினம் (21) காலை காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் ஒரு சில படகுகளுக்கு மாத்திரம் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முற்றிலும் தடை
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கிரகரி , வாவியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது.மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மிதி படகுகள் இயக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வாவி பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது அத்துடன் மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .






ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri