நானுஓயாவில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை: அச்சத்துடன் மக்கள்
நுவரெலியா - நானுஓயாவை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் மக்கள் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நானுஓய பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுவதாகவும் மேலும், இவை நானுஓயா பிரதான நகருக்கு செல்லும் முக்கியமான வீதிகளாகவும் காணப்படுகின்றன.
தொடர்ந்தும் இப்பகுதிகளில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்
குறித்த கடவை, புகையிரத கடவைப் பாதுகாவலர் இல்லாத காரணத்தினாலும், புகையிரத கடவை தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகையை எதுவும் காட்சிப்படுத்தாதன் காரணத்தாலும் பல விபத்துக்கள் ஏற்பட்டு மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே இப்பகுதிகளில் பாரிய விபத்தோ அல்லது மக்களின் பல உயிர்களையோ பலி எடுப்பதற்கு முன் உரிய அதிகாரிகள் விரைவில் கவனம் செலுத்தி பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு காவலர்களை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அண்மையில் அக்கடவை வழியில் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதை தொடர்ந்தது நாட்களில் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |