76 கோடி ரூபாவுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி
மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரைத் தேடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று மாலைதீவுக்குச் சென்று நேற்று அதிகாலை அவரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.
76 கோடி ரூபா பணத்தை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மாலைத்தீவுக்கு தப்பிச் சென்று நான்கு மாதங்கள் தலைமறைவாகியிருந்த மாணிக்கக்கல் வியாபாரி மொஹமட் இஸ்திகார், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மாணிக்கக்கல்
பேருவளை மாணிக்கக்கல் வியாபாரிகளின் மாணிக்கக் கற்களை விற்பனை செய்வதாகக் கூறி இந்த வர்த்தகர் மாணிக்கக் கற்களை எடுத்துச் சென்று ஏமாற்றியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவில் வர்த்தகர்கள் இருவர் முறைப்பாடு செய்திருந்தனர்.
அதற்கமைய, சந்தேகநபரை கண்டுபிடிக்க ஆரம்பித்த விசாரணையில் 4 மாதங்களாக மாலைதீவில் அவர் பதுங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மாலைதீவு அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
சிவப்பு எச்சரிக்கை
நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்ததாகக் கூறி சந்தேக நபரைக் கைது செய்தனர்.
தன்னை இலங்கைக்கு நாடு கடத்தினால் உயிரை மாய்த்துக் கொள்வதாக சந்தேக நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதற்கமைய, சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் மூலம் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைக்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று மாலைதீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சந்தேக நபர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
மாலைதீவிலிருந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவர நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
