தொடருந்து கடவை பாதுகாவலர்களின் உழைப்பு சுரண்டப்படுவதாக குற்றச்சாட்டு
பாதுகாப்பற்ற தொடருந்து கடவை பாதுகாவலர்களுக்கு ஒரு நாளைக்கான வேதனமாக 250 ரூபா வழங்கப்படுவதாகவும் அது தங்களின் ஜீவனோபாயத்திற்கு போதுமானதல்ல என இலங்கை பாதுகாப்பற்ற தொடருந்து கடவை பாதுகாவலர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை பாதுகாப்பற்ற தொடருந்து கடவை பாதுகாவலர்களின் கூட்டமைப்பு முன்னிலை சோஷலிச கட்சியின் பொலன்னறுவை மாட்டத்தின் மத்திய குழு உறுப்பினரிடம் தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் நடத்திய கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளனர்.
இவர்களின் பிரச்சினை தொடர்பில் முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த சில்வா கருத்து தெரிவிக்கையில்,
எட்டு மணி நேர வேலைக்கு 250 ரூபாவே வழங்கப்படுகிறது. இவர்களில் அநேகர் 2013ஆம் ஆண்டே இணைந்துக் கொண்டுள்ளனர்.
இவர்கள் 12 வருடங்களாக 250 ரூபா வேதனத்தில் துன்பியல் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளும் இவர்களை ஏமாற்றியே வந்துள்ளது.

தொழிலாளர் சட்டங்கள் எங்கே
அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஹரினி மற்றும் ஜனாதிபதி அநுர ஆகியோரை சந்தித்து மகஜர்களையும் சமர்ப்பித்துள்ளனர்.
அத்தோடு இவர்களுக்கு குறைந்ந பட்சம் ஊழியர் சேமலாப நிதியோ நம்பிக்கை நிதி கூட இல்லை. இவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர் சட்டத்தில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பொலிஸ் நிலையத்தினாலேயே நிமயனப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.தொடருந்து கடவைகளை நவீனமயப்படுத்தப்போவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் இவர்களின் வாழ்க்கை பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிக்கவும் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri