உயிருக்கு போராடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்: காப்பாற்றிய உயிர்காப்பாளர்கள்
மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்பாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வரும் 13 முதல் 55 வயதுக்குட்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை
இவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களும் உள்ளடங்கியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
கடற்கரையில் பணியில் இருந்த உயிர்காப்பாளர்கள் இதனை அவதானித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri