இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை: சுவிஸ் அரசியல் கட்சி தீர்மானம்
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில், சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சி, சர்வதேச இனப்படுகொலை விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் அந்தக்கட்சி நிறைவேற்றியுள்ளது.
அண்மையில், லூசெர்ன் மாகாணத்தில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கங்களின் வன்முறைகள்
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கங்களின் வன்முறைகள் படுகொலைகள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை இந்த தீர்மானம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் இனப்படுகொலை மாநாட்டின் கீழ் குற்றங்கள் இனப்படுகொலைக்கு தகுதியானதா என்பதை சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து சுவிஸ் அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும் இந்த தீர்மானம் கோருகிறது.
கட்சி மாநாட்டின் போது, சுவிட்சர்லாந்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூன்று சுவிஸ்-தமிழ் அரசியல்வாதிகள் இந்த தீர்மானத்தை முன்வைத்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |