மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ பிரதேசத்தில் (11.10.2023) நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையின் காரணமாக, பொகவந்தலாவ சென்மேரிஸ் தேசிய பாடசாலைக்கு சொந்தமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, வகுப்பறைகளிலும் நீர் நிரம்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன சாரதிகளுக்கு அறிவித்தல்
சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பெய்த கடும் மழை காரணமாக பல தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகளும் மழைநீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நோர்டன்பிரிட்ஜ் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமன்றி கனமழை காரணமாக ஹட்டன்- நுவரெலியா, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், எனவே அவ்வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் : தொடர்ந்து ஒலிக்கும் சைரன்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam