ஐரோப்பாவை உலுக்கும் வரலாறு காணாத வெப்ப அலை!
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் வீசி வரும் கடுமையான வெப்ப அலை, மேற்கு ஐரோப்பாவிலிருந்து ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற கிழக்கு பகுதிகளை நோக்கி தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஜூன் மாதத்திற்கான வெப்ப அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளதோடு, பிரான்சில் இந்த அதீத வெப்பத்தின் காரணமாக உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, ஜெர்மனியின் சார்ப்ரூக்கன் பகுதியில் ஆரம்பகட்ட கணக்கெடுப்பின்படி வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை (106°F) எட்டியுள்ளது.
எச்சரிக்கை
இந்த அசாதாரண சூழ்நிலையால் தொடருந்து தண்டவாளங்கள் மற்றும் வீதிகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், மின் உற்பத்தி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

வளிமண்டலத்தில் ஏற்படும் 'ஒமேகா பிளாக்' என்ற வானிலை நிகழ்வே இந்த கடுமையான வெப்பக் காற்று ஒரே இடத்தில் தேங்குவதற்குக் காரணம் என்றும், மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இந்த நிலைமைக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.