பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் - முஸ்லிம் பகுதிகளில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்
தமிழ் பேசும் மக்களின் நீதிகோரிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் இன்றையதினம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
இன்று மட்டக்களப்பு - தாழங்குடா பகுதியில் இருந்து ஆரம்பமான குறித்த போராட்டத்தில் தற்போது பெருமளவான பொதுமக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், குறித்த போராட்டத்திற்கு முஸ்லிம் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது முஸ்லிம் மக்களும் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
அத்துடன், காத்தான்குடி, ஏறாவூர் போன்ற பல முஸ்லிம் பகுதிகளில் வரலாறு காணாத அளவு மக்கள் திரண்டு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்,மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் உள்ளிட்ட அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றைக் கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்த போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.














தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
