நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பு
பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்து வரும் நிலைமையில் திட்டமிடப்படாத வெகுஜன எதிர்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவது தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியமை மற்றும் சர்வதேச நாணய நிதியததின் உதவியை பெற்றுக்கொள்ள முடிவு செய்தமை ஆகியவற்றுக்கு இந்த பின்னணியே பிரதான காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது.
ஏற்பட்டு வரும் மக்கள் எதிர்ப்பானது அரசியல் கட்சியை மீறி செல்லும் வெகுஜன எதிர்ப்பாக மாறி வருவதாக புலனாய்வு பிரிவுகள் அறிக்கை வழங்கியுள்ளன.
பொது மக்களுக்கு தமது அத்தியவசிய தேவையான உணவை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது மோசமான சமூக நெருக்கடியாக மாறி வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கைச் செலவுகளுடன் பணவீக்கம் அதிகரிக்கும் போது மக்களுக்கு கொள்வனவு செய்யும் இயலுமை குறைந்து அவர்கள் மத்தியில் விரக்தியான நிலைமை உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
