தாமதித்தால் பாதிப்பு உங்களுக்கே! சஜித் அணிக்கு ஐ.தே.க. எச்சரிக்கை
எதிர்வரும் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்த ஒரு பலமான கூட்டணியாகவே எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டணி குறித்த பேச்சுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும்.
அடுத்த தேர்தலை ஒரு கூட்டணியாக எதிர்கொள்வதற்கான அனைத்துத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி
இந்த இணைவு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுப்பதில் தாமதம் காட்டினால், அது அந்தக் கட்சிக்கே அரசியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பேச்சுகளின் தொடக்கத்திலேயே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற உத்தரவாதத்தைக் கோருவது, கலந்துரையாடல்கள் முறிவடைவதற்கே வழிவகுக்கும்.
ஏனெனில், ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை ஒருவர் தனது செயல்களின் மூலமே நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam