சட்டத்தரணிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாதுகாப்பு கோரலாம்! அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் உள்ள ஒரு சட்டத்தரணிகள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால், பொது பாதுகாப்பு அமைச்சின் மூலம் பாதுகாப்பு கோரலாம் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
வழக்கறிஞர்களுக்கு அச்சுறுத்தல்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டதை தாம் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த கொலையை செய்தவர்கள் மன்னிக்கப்படமாட்டார்கள் என்றும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த சம்பவத்தின் விளைவாக எந்த சட்டத்தரணிகளும் அச்சுறுத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது எதிர்க்கட்சி உள்ளிட்ட குழுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு குழப்பம் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri