தேர்தல் களத்திலிருந்து யானை மற்றும் மொட்டு கட்சிகள் தாராளமாக விலகலாம்: சரித ஹேரத்
மக்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக விளங்கிக் கொள்ள முடியும், தேர்தலில் போட்டியிடத் தயாரில்லையெனில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தேர்தல் களத்திலிருந்து தாராளமாக விலகிக்கொள்ளலாம் என சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (24.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில் தேர்தலைப் பிற்போட ஏதேனும் புதிய வழிமுறை இல்லையா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
ஜனநாயகம்
தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது. தேர்தல் இல்லாத நாட்டில் ஜனநாயகம் இல்லை.
நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை தேர்தல் ஊடாகவே விளங்கிக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது.
மக்கள் ஆணை இல்லாத அரசுக்குச் சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. மக்களின் அரசியல் நிலைப்பாடு எந்த தன்மையில் உள்ளது என்பதை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக சர்வதேசம் விளங்கிக்கொள்ளும்.
மக்கள் ஆணை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் தேர்தலுக்குத் தயாரில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்குத் தயாரில்லையெனில் தேர்தல் களத்திலிருந்து தாராளமாக விலகிக்கொள்ளலாம்.
69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களால் பதவி நீக்கப்பட்டார்.
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் மக்கள் ஆணை தொடர்பில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
