தேர்தல் ஆணைக்குழுவுடனான ஐ.தே.வின் சந்திப்பு : சந்தேகம் வெளியிடும் சஜித் தரப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அதன் தவிசாளரும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் நடாத்திய கலந்துரையாடல் தொடர்பில் வெளிப்படைத்தன்மை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை
இதேவேளை, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், ஒரே அமைச்சரவையைச் சேர்ந்த இருவர் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடும் குறிப்பிடத்தக்க முதல் நிகழ்வாக அமையும் என திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பை மையப்படுத்தி, இந்த கருத்தை மயந்த திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க் News Lankasri
