நாங்கள் பாயும் தவளைகளோ தாவும் குரங்குகளோ அல்லர்: மனோ எம்.பி
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம் எனவும் நாங்கள் பாயும் தவளைகளோ அல்லது தாவும் குரங்குகளோ அல்லர் என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் பற்றி கலந்துரையாடவில்லை. பெருந்தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாக அறிவிக்கும் உத்தேச திட்டம் பற்றியே கலந்துரையாடப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் யாருக்கு ஆதரவு என கேள்வி எழுப்பப்பட்டபோது,
“நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். நாங்கள் பாயும் தவளைகளோ அல்லது தாவும் குரங்குகளோ அல்லர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
