ஐ.தே.க வின் தலைமைப்பதவி குறித்து சஜித் தரப்பு வெளியிட்ட தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டால் மாத்திரமே இரு தரப்பு இணைவு என்பது சாத்தியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
இதற்கான விட்டுக்கொடுப்பை ரணில் விக்ரமசிங்க செய்யாதவரை இணைவு என்பது சாத்தியப்படமாட்டாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித்துக்கு ரணில் அழைப்பு
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் உள்ளேன்.
இந்த இணைவு என்பது அரசியல் பிரசாரமாக இருக்கக்கூடாது. உண்மையான இணைவாக இருக்க வேண்டும்.
அப்படியானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை பொறுப்பேற்குமாறு சஜித்துக்கு, ரணில் அழைப்பு விடுக்க வேண்டும்.
அவ்வாறு அல்லாமல் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதால் நடக்கப்போவது எதுவும் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் உண்மையான இணைவுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். மாறாக தோல்வியை மறைப்பதற்காக இணைவு பற்றி பேசி பயன் இல்லை" என்றும் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
