சர்ச்சையாக மாறிய அநுர தரப்பின் கருத்து: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என விவசாயம், கால்நடை வளர்ப்பு அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானது என வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் நயனக ரன்வல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பான அமைச்சரின் தவறான கருத்தை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என நயனக ரன்வல்ல சுட்டிக்காட்டியுளடளார்.
கொழும்பில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (0712.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விவசாயிகள் நடவடிக்கை
விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம். அதனால் எவ்வித சட்ட சிக்கலும் வராது என விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கால் காந்த அண்மையில் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானதொரு கருத்தாகும்.

விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்றால் விளைநிலங்களுக்கு வருகைத் தரும் விலங்குகளை கொல்லலாமா, என்ற கேள்வி எழும்.
காட்டு விலங்குகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு வெறுப்புக்குள்ளாகியுள்ளர். இவ்வாறான பின்னணியில் விவசாயிகளுக்கு அமைச்சரின் கருத்து உத்தேவகமளிக்கும் வகையில் உள்ளது.
அமைச்சரின் இந்த பாரதூரமான கருத்து தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எதனையும் குறிப்பிட முடியாது. அமைச்சரின் கருத்துக்கு அமைய செயற்பட்டு நெருக்கடிக்குள்ளாக வேண்டாம்என்று விவசாயிகளிடம் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri