தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கம் முன்வரவேண்டும் என சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு தன்னாமுனையில் இடம்பெற்ற கருத்தரஙகில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதன்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள்,
பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சனை
இந்த நாட்டிலே மூவின மக்களின் வளங்கள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுகின்றன. பெண்களும் பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தேசியப் பிரச்சனைக்கு இன்று வரைக்கும் ஒரு நிரந்தரத் தீர்வில்லாத நிலையில் அற்கான குரலாக தென்னிலங்கயில் இருக்கும் சிவில் அமைப்புகளும் குரல்கொடுக்க முன்வந்திருக்கின்றார்கள்.
இந்த மூன்று விடயங்களையும் வெளிப்படுத்துகின்ற ஒரு ஊடக வலையமைப்பை இலங்கை முழுவதும் வடகிழக்கு தென்னிலங்கை மக்கள் உரையாடல் ஊடாக ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த அடிப்படையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வள அபகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, அரசியற் தீர்வு தொடர்பான விடயங்களில் தாங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் வெளிப்படுத்தப்பட்டன.
இதனூடாகப் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கான தீர்வு இலங்கை அசாங்கத்தின் ஊடாகக் கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பின் ஊடாகவும் நாங்கள் வேண்டி நிற்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |