ஆயுதத்தால் ஆட்சியை கைப்பற்ற மாட்டோம்... அரசாங்கத்துக்கு மனோவின் அதிரடி அறிவிப்பு!
ஆயுதப் பலம், ஆக்கிரமிப்பு பலத்தால் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்த, முயற்சிக்கும் கட்சிகள் நாம் அல்ல என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா இன்று(20.09.2025) காலை 9.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடரந்துரையாற்றிய அவர்,
“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகம் மூன்றாம் மாடியில் அமைந்துள்ளது.
குழப்பத்தில் அரசாங்கம்
அங்கு கட்சித் தலைவர்கள் நாங்கள் எல்லோரும் கூடி நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, நாங்கள் அரசுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக அரசாங்கத் தரப்பு கூறுகிறது.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மற்றும் ஜீ.எல்.பீரிஸின் வீட்டில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் சூழ்ச்சி செய்வதாக தெரிவிக்கின்றனர்.
நாங்கள் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கவில்லை. ஏன் அரசாங்கம் குழப்பத்திற்கு ஆளாகிறது? அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் நான் பங்கேற்றேன். எனக்கு நன்கு தெரியும்.
76 வருட சாபம்
எவ்வித சட்டவிரோத ஆட்சி கவிழ்ப்பும் இடம்பெறவில்லை. ஆனால், அரசாங்கம் அமைப்பது எவ்வாறு என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசாங்கத்தின் பிழைகளை தேடுகிறோம்.
ரணில் விக்ரமசிங்க கூட அரசியலமைப்பின் மூலமே ஜனாதிபதி ஆனார். அவர் வங்குரோத்தான நாட்டை கட்டியெழுப்பினார். அவ்வாறு கட்டியெழுப்பட்ட நாட்டையே அரசாங்கம் கைப்பற்றியது.
அரசாங்கம் கூறும் 76 வருட சாபத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அப்படியென்றால் அதில் 50 சதவீதத்தை ஆட்சிலியிருக்கும் பிரதான கட்சியும் பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



