பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு!
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனம் இன்றைய தினம் (30) அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
நெருக்கடி
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க நேற்று (29) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது.ஆனால் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
அத்துடன், தற்போது அரச கல்வி வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்களின் பற்றாக்குறை தற்போது கடுமையான நிலையில் காணப்படுகின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 பேராசிரியர்கள் வெளியேறியுள்ளனர் என்றும் சாருதத்த இளங்கசிங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
