கட்டம் கட்டமாக பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்
கட்டம் கட்டமாக பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரே தடவையில் பல்கலைக்கழகங்களை திறக்காது கட்டம் கட்டமாக மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நான்காம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என குழுக்களாக பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதி வசதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக விரைவில் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் வதியும் கிராம சேவைப் பிரிவு அல்லது பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்படும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இணைந்து கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri