பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக தீப்பந்தம் ஏற்றி ஆர்பாட்டம்(Photo)
கிழக்கு பல்கலைக்கழக சுதேச வைத்திய பராமரிப்பு பீட மாணவர்கள் மட்டக்களப்பில் நேற்று(08) இரவு தீப்பந்தம் ஏற்றி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'மக்களை ஒடுக்கும் ஊழல் அரசுக்கு எதிராக அணிதிரள்வோம்' என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுதேச வைத்திய பீட மாணவர்களின் விடுதிக்கு முன்னால் நேற்று மாலை 6 மணிக்கு நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ பீட மாணவர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
தீப்பந்தம் ஏற்றி ஆர்பாட்டம்
"மாணவர்களின் எதிர்காலத்தை பெறுப்பேற்றுவது யார்? கோட்ட வீட்டுக்கு போ, அராஜக ஆட்சியை நிறுத்து, பாடசாலைகளை உடன் திற" போன்ற அரசுக்கு எதிரான பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்ட ஊர்வலமாக ஆரம்பித்துள்ளனர்.
ஊர்வலம்
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு-திருகோணமலை பிரதான வீதி ஊடாக 4 கிலோ மீற்றர் தூரம் உள்ள மட்டக்களப்பு
நகர் பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தை சென்று அங்கு தீப்பந்தம் ஏற்றி
கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் இரவு 7.30 மணிவரை ஈடுபட்டுள்ளனர்.











