யாழ். பல்கலை மாணவனின் வகுப்புத் தடை நீக்கம்
யாழ்ப்பாணம் (Jaffna) பல்கலைக்கழக துணைவேந்தரால் யாழ். பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடை சட்ட நியமனங்களுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு அந்த மாணவனின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வகுப்புத் தடை
இவ்வாறான நிலையிலேயே நேற்று (15) அவருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடை மீளப்பெறப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை 'தவறானது' என்று அறிவிக்கக் கோரியும், இழப்பீடு உள்ளிட்ட நிவாரணங்களைக் கோரியும் குறித்த வழக்கு தொடரும் என்று மாணவன் சி.சிவகஜனின் தரப்புச் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
