யாழில் சோகம் : பரிதாபகரமாக உயிரிழந்த இளம் பெண்
யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து வந்த பெண் தீயில் எரிந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
மெழுகுதிரி எரிந்து தீ விபத்து
ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று (16) அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

படுக்கை அறையில் மெழுகுதிரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது என்று உயிழப்பதற்கு முன் வைத்தியசாலை முறைப்பாட்டில் மேற்படி பெண் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் (வயது 35) என்ற உதவி பிரதேச செயலாளரே உயிரிழந்துள்ளார்.
அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam