4 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட T56 துப்பாக்கி!
கடந்த 2021 ஆம் ஆண்டு கடற்படை ஆயுதக் கிடங்கில் இருந்து காணாமல் போன T56 துப்பாக்கியை வைத்திருந்ததற்காக குளியாப்பிட்டியின் இலுக்கேன பகுதியில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டி பொலிஸாருக்கு கடற்படை தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு குழு, சந்தேக நபரைக் கைது செய்ய உதவியதாக பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதக் கிடங்கு
கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தின் ரங்கல்ல முகாமில் ஆயுதக் கிடங்கிற்குப் பொறுப்பாக நிறுத்தப்பட்டிருந்த சந்தேக நபர் காணாமல் போனதுடன், அந்த நேரத்தில் குறித்த துப்பாக்கியும் காணாமல் போயிருந்தது.
இந்நிலையில், 4 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு பின்னர் தற்போது கல்போலாவில் உள்ள கடற்படை வீரர் ஒருவரின் வீட்டில் இந்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடரந்து, கைது செய்யப்பட்ட கடற்படை வீரர் வெலிசறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக விசாரணைக்காக குளியாப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |