கோர விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர் - வெளியான சிசிரிவி காணொளி
கஹதுடுவ - ரிலாவல சந்தியில், மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - ஹொரணை வீதியில் கொழும்பிலிருந்து கஹதுடுவ நோக்கி மாணவர் பயணித்தபோது, ஹொரணை திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வீதியின் குறுக்கே கிரிகம்பமுனுவ திசைக்குத் திரும்பியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணம்
இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளன.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்தியமையே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவர் வேதர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதியை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam