அரசின் செயலால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் பெருந்தொகை வாகனங்கள்
கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகையான வாகனங்கள் தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக 500 புதிய வாகனங்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு காரணங்களினால் இந்த வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
வரி அதிகரிப்பு
சில வாகனங்கள் தனிநபர்களால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது.

இறக்குமதிக்கு பின்னர் வரி அதிகரிப்பு காரணமாக அந்த வாகனங்களை விடுவித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 83.1 சதவீதம் புதிய வாகனங்களாகும் என தெரியவந்துள்ளது.
இதில் அதிகப்படியான பதிவுகள் சீனாவின் BYD ரக வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.