கைதுகளை கண்டித்து யாழ். பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Video)
அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக முன்றலில் மாணவர்களால் இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக யாழில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலன் சுவாமி கைது
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இன்னமும் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இக்கைது நடவடிக்கைகளை கண்டித்து மாணவர்கள் மேற்குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது மாணவர்கள் பதாதைகளை
ஏந்தியவாறு அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
