பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியம் : வடக்கு ஆளுநர்
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, வழிபாட்டு தலங்களுக்கான அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (09.01.2024) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அன்பளிப்பு பொருட்கள்
ஆளுநரால் நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவில், ஆவரங்கால் சிவன் கோவில், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை, இளவாலை புனித பிலிபேரிஸ் தேவாலயம் ஆகியவற்றுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்த ஆளுநர், வருகைதந்த மத குருமார்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
மேலும், மதங்களிடையே பூசல் உருவாக இடமளிக்க கூடாது என குறிப்பிட்ட ஆளுநர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மத ஒற்றுமை அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








