தெல்லிப்பழை பொலிஸில் அர்ச்சுனா முன்வைத்த முறைப்பாடு.. விசாரணையில் வெளியான தகவல்
தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெல்லிப்பழை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வலிகாமம் பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் உட்பட பலர் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக அர்ச்சுனா குறித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மல்லாகம், காங்கேசன்ராய வீதி, 80/14 என்ற முகவரியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கட்சி அலுவலகம் ஒன்றைப் பராமரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி அழைப்பு
இந்நிலையில் அர்ச்சுனாவோ அல்லது உறவினர்களோ அல்லது வெளியாட்களோ அந்தப் பகுதியில் வசிக்கவில்லை என்றும், அர்ச்சுனா மீசாலை வடக்கில் உள்ள கொடிகாமம் பகுதியில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, அந்த அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி இரண்டு தொலைபேசி எண்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து அழைப்புகள் வந்ததாக 119 அழைப்பு மையம் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, மல்லாகம் காங்கேசன்ராய சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு பொலிஸ் அதிகாரி சென்று ஆய்வு செய்த போது, அங்கு யாரும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்தபோது, அவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருவதாகவும், வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையத்திற்கு வருவதாகவும் கூறியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, பொலிஸ் நிலையத்திற்கு வந்த அர்ச்சுனா, வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விபரங்களைக் கூறி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இரண்டு நபர்கள் தொலைபேசியில் தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
டிட்வா புயல் உருவாகிய பாதையில் உருவாகவிருக்கும் புதிய காற்றுச் சுழற்சி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை